Saturday, June 4, 2016

Hari Narayana!



No one has yet understood that how, when and where an end of life will come; but through this prayer, we can demand and visualize the ideal state of our last time. When my last breath comes to my throat Idont know I can pray you. So Today iam praying you come &Bless me. O Krishna, Lord of Guruvayur ! May Thou strengthen my devotion to Thee and cure all my ailments

 With this prayer one can desire a favor from Lord Krishna to be the present and provide complete peace of mind & disease free body when the life comes to an end. hey Narayana,I request you to please do me a favour, at the last moment of my breath; I could utter the name of Hari Narayana and that becomes an end to my life…


அந்திய காலத்தில் வந்தருள்வாயே

ஹரி நாராயன ஹரி நாராயன ஹரி நாராயன நாராயணா
ஓம் ஹரி நாராயன ஹரி நாராயன ஹரி நாராயன நாராயணா

நாராயணா ஸ்ரீமன் நாராயணா பத்ரி நாராயணா ஹரி நாராயணா
நாராயணா சத்யநாராயணா சூரியநாராயணா லக்ஷ்மி நாராயணா

நொந்துடலும் கிழமாகி தளர்ந்த பின் நோயில் நடுங்கிடும்போது
ஜீவ நாடிகள் நைந்திடும்போது மனம் என்னிடுமோ தெரியாது - இன்று சிந்தைக் கசிந்து உன்னை கூவுகின்றேன் அருள் செய்திடுவாய் ஹரி நாராயணா!

நீடுகபம் கோழை ஈழை நெருக்கி என் நெஞ்சையடைத்திடும் போது
விக்கி நாவும் குழறிய போது மனம் எண்ணிடுமோ தெரியாது - நான் அன்று கூவிட இன்றழைத்தேன் எனை ஆண்டருள்வாய் ஹரி நாராயணா!

ஐம்பொறியும் கரணங்களும் வாயுவும் ஆடி அடங்கிடும்போது எந்தன் ஆவி பிரிந்திடும்போது மனம் எண்ணிடுமோ தெரியாது - இன்று நம்பி உனைத்தொழுதே அழைத்தேன் ஜகன் நாயகனே ஹரி நாராயணா!

உற்றவர் பெற்றவர் மற்றவர் சுற்றமும் ஒவென்று நின்றழும்போது உயிர் ஓசைகள் ஓய்ந்திடும்போது மனம் எண்ணிடுமோ தெரியாது - இன்று பற்றி உன்னை பணிந்தே அழைத்தேன் ஆபத்பாந்தவனே ஹரி நாராயணா!

என்பொருள் என்மனை என்றதெல்லாம் இனி இல்லை என்றாகி விடும்போது - மனம் எண்ணிடுமோ தெரியாது - நீ அன்று வரும் பொருட்டின் அழைத்தேன் அருள் அச்சுதனே ஹரி நாராயணா!

வந்தெம தூதர் வளைந்து பிடித்தெனை வாவென்றழைத்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது - அந்த அந்தியம் நீ வர இன்றழைத்தேன் சச்சிதானந்தனே ஹரி நாராயணா!